உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடவல்லானுக்கு ஆனி திருமஞ்சனம் : நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடவல்லானுக்கு ஆனி திருமஞ்சனம் : நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

சூலூர்: ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.சிவன் கோவில்களில் உள்ள நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். சூலூர் சிவன் கோவில், சின்னியம்பாளையம் சிவன் கோவில் மற்றும் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமானை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !