செல்வ விநாயகர் கோவில் ஆண்டு விழா
ADDED :1370 days ago
அன்னூர்: செல்வ விநாயகர் கோவில் 23 வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அன்னூர், கோவை ரோட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் நிறுவப்பட்ட 23 வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அதிகாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. இதை அடுத்து பால், தயிர், பன்னீர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் செல்வ விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து அலங்கார பூசை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தி குருக்கள் தலைமையில் ஹோம பூஜைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.