உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் பொய்கை விநாயகர் கோயில் பாலாலயம் : தினமலர் செய்தி எதிரொலி

சோழவந்தான் பொய்கை விநாயகர் கோயில் பாலாலயம் : தினமலர் செய்தி எதிரொலி

சோழவந்தான்: சோழவந்தான் பொய்கை விநாயகர் கோயில் புதுப்பிக்கும் பணி தினமலர் செய்தி எதிரொலியாக பாலாலய வைபவத்துடன் துவங்கியது.

இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. கட்டடத்தில் மரங்கள் வளர்ந்து காணப்பட்டது. உக்கிரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட பழமையான கோயில் நிலை குறித்து 2021 டிச.,3ல் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.கோயிலை புதுப்பிக்க அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பக்தர்கள் நன்கொடை உதவியுடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிடபட்டுள்ளது. இதற்கான பாலாலயம் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்திபீடம் குரு மகா சன்னிதானம் ஞானகுரு சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்தது. மூலவர், சுவாமி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. அறநிலையத்துறை துணை ஆணையர் ( நகை சரிபார்ப்பு) பொன்.சுவாமிநாதன், நிர்வாக அலுவலர் இளமதி, சாய் மகராஜ் டிரஸ்டிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !