உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் வாராகி அம்மனுக்கு நவராத்திரி விழா

திரவுபதியம்மன் கோவிலில் வாராகி அம்மனுக்கு நவராத்திரி விழா

சிதம்பரம்: சிதம்பரம் திரவுபதியம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா நடந்தது.சிதம்பரம் சின்னக் கடைதெரு பகுதியில், திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, தனி சன்னதியில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இச்சன்னதியில், கடந்த மாதம் 29ம் தேதி ஆஷாட நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் வெண்ணை காப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி கவுன்சிலர் ரமேஷ், அர்ச்சகர் ராஜா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !