உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா இன்று (11ம் தேதி) மாலை நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்களுக்கு தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அபிேஷகங்கள் செய்யப்பட்டு, இரவு பஞ்சமூர்த்தி வீதியுலா நடைபெறும். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் உற்சவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.


கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில், உற்சவர் முத்தாம்பிகை சமேத அர்த் தநாரீஸ்வரருக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நந்திவாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. 9வது நாள் உற்சவத்தையொ ட்டி இன்று மாலை 3.30 மணியளவில் தேர் திருவிழா நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலேயே மிகப்பெரிய அளவிலான 65 அடி உயரம் கொண்ட தேரினை , ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தே ரோடும் வீதிவழியாக இழுத்து செல்வர். வெகு விமர்சையாக நடை பெறும் அர்த்தநாரீஸ்வரர் தேர் திருவிழாவில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்பர். எனவே , பக்தர்களின் வசதிக்காக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், மலுார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து ரிஷிவந்தியத்திற்கு கூடுதல் அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !