நடுச்சாலைப்புதுார் ஆதிநாராயண சுவாமி கோயில் தேரோட்டம்
ADDED :1207 days ago
களக்காடு: களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூர் ஆதிநாராயண சுவாமி கோயில் ஆனிதேரோட்டத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 8ம்தேதி பாரிவேட்டை நடந்தது. கோயில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (11ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.