சர்வசாதகம் என்பதன் பொருள் என்ன?
                              ADDED :1207 days ago 
                            
                          
                           
 கும்பாபிஷேகத்தின் போது யாகசாலை அமைத்தல், சுவாமி சிலைக்கு மருந்து சாத்துதல், கலசங்களை சரிபார்த்தல், அபிேஷகம், ஆராதனை என எல்லாம் முறையாக நடக்க வேண்டும். அப்போது அர்ச்சகர்கள் யாகத்தில் அமர்ந்திருப்பது அவசியம் என்பதால் மேற்படி விஷயங்களை அவர்களின் பிரதிநிதியாக சிவாச்சாரியார் அல்லது பட்டாசாரியார்கள் நடத்துவர். இவர்களையே ‘சர்வசாதகம் (எல்லாவிதத்திலும் உதவுதல்) என்பர்.