கால பைரவர் மகிமை
ADDED :1262 days ago
காசி,அயோத்தி,மதுரா, ஹரித்துவார், , உஜ்ஜைனி, துவாரகை, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை முக்தித்தலங்கள் என்பர். இவற்றில் முதன்மையானது காசி.
கங்கை கரையில் உள்ள 64 கட்டங்களில்( படித்துறை) 64 பைரவர் உள்ளனர். காசி யாத்திரையின் முடிவில் பைரவரை தரிசித்து காசிக்கயிறை கட்டுவது அவசியம். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து, ராமநாதர், பைரவரையும் தரிசிக்க வேண்டும். யாத்திரை செல்வோர் ராமேஸ்வரம் கோடி தீர்த்தத்தால் காசி விஸ்வநாதருக்கும், கங்கை தீர்த்தத்தால் ராமநாதருக்கும் அபிேஷகம் செய்தால் தான் காசி யாத்திரை முழுமை பெறும். காசி – ராமேஸ்வர யாத்திரையால் நம் தேச ஒற்றுமை பலப்படுகிறது.