உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனித்தேரோட்ட திருவிழா : நெல்லை ரதவீதிகளில் குப்பைகள் அகற்றம்

ஆனித்தேரோட்ட திருவிழா : நெல்லை ரதவீதிகளில் குப்பைகள் அகற்றம்

திருநெல்வேலி; நெல்லையப்பர் ஆனித்தேரோட்ட திருவிழா முடிந்து ரதவீதிகளில் மலைபோல் தேங்கிய குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்ட விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் ரதவீதிகளில் குப்பைகள் அதிக அளவில் தேக்கமடைந்திருந்தது. காலியான தண்ணீர் பாட்டில்கள், டீ கப்கள், சாப்பாடு பார்சல் இலைகள், அட்டைடப்பாக்கள் என குப்பைகள் ஆங்காங்கே அதிக அளவில் தேங்கியிருந்தது. தேங்கிக்கிடந்த குப்பைகளை நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ. கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகராட்சி பணியாளர்கள் நேற்று காலை 5மணி முதலே அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதுபோல்கோயில் வாசலிலும் ஆயிரக்கணக்கான ஜோடி செருப்புக்கள் கேட்பாரற்று கிடந்தன . இவற்றை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் எடுத்து லாரிகள் மூலம் அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !