முத்து மாரியம்மன் கோவில் முளைப்பாரி ஊர்வலம்
                              ADDED :1205 days ago 
                            
                          
                          ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோவில், முளைப்பாரி விழா, ஜூலை 5ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் பெண்கள் வீடுகளில் முளைப்பாரி வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து தினமும் கோவிலில் பெண்கள் கும்மியாட்டமும், ஆண்கள் ஒயிலாட்டமும் ஆடி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். விழாவின் தொடர்ச்சியாக, நேற்று இரவில், வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பக்தர்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து விழாவின் கடைசி நாளான நேற்று, கோவிலில் இருந்து முளைப்பாரிகளை பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ,அரசூரணி குளத்து நீரில் கரைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினார்.