களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :1180 days ago
களக்காடு: களக்காடு சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தனர். தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, வருசாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடந்தது. இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் வீதிஉலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.