உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்பநாய்க்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

அப்பநாய்க்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா

சூலூர்: அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

சூலூர் அடுத்த அப்ப நாயக்கன்பட்டியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, ஆனி மாதத்திருவிழா, கடந்த 11 ம்தேதி கம்பம் நடுதலுடன் துவங்கியது. அன்று இரவு மகாலட்சுமி வள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடந்தது. 12 ம்தேதி பம்பை மேளதாளத்துடன் அம்மை அழைத்தல் வைபவம் நடந்தது. நேற்று மா விளக்கு மற்றும் பூவோடு எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !