பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :1535 days ago
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கீழமாத்துரர் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் 56வது ஆண்டு உற்ஸவ விழா ஜூலை 5ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.அம்மனுக்கு கரகம் ஜோடித்தும், மாவிளக்கு, அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கிராம இளைஞர் அணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காளியம்மன் கோயில் தெரு மக்கள் செய்திருந்தனர்.