உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோப்பு உற்சவத்தில் கடலுார் பாடலீஸ்வரர் அருள்பாலிப்பு

தோப்பு உற்சவத்தில் கடலுார் பாடலீஸ்வரர் அருள்பாலிப்பு

நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் கோவிலுக்கு வந்த கடலுார் பாடலீஸ்வரர் தோப்பு உற்சவத்தில் அருள்பாலித்தார்.அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்றும் சிறப்பு அபிஷேகம், உற்சவம், தீர்த்தவாரி நடக்கும். ஆனி மாதப் பவுர்ணமி அன்று வன உற்சவம் என்று சொல்லப்படும் தோப்பு உற்சவம் நடப்பது வழக்கம். இதற்காக கடலுார் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரர் நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் கோவிலில் நேற்று எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, வன உலாவும், சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி சமேதராய் பாடலீஸ்வரர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.செயல் அலுவலர் சிவக்குமார், ருத்ரமூர்த்தி, பிரபாகரன், முருகன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !