பெரியபட்டினத்தில் பவுர்ணமி விளக்கு பூஜை
ADDED :1515 days ago
பெரியபட்டினம்: பெரியபட்டினத்தில் உள்ள அழகுநாயகி அம்மன் கோயிலில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு 108 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகி குப்புசாமி பூசாரிகள் முத்துகருப்பன், ஆனந்த் உள்ளிட்ட விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.