விநாயகரை வழிபட வரும் பக்தர்களுக்கு இடையூறு
ADDED :1292 days ago
சின்ன காஞ்சிபுரம் சி.எஸ்.செட்டித்தெரு அருகில், மூன்றாம் திருவிழா மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் பராமரிப்பில் உள்ள இந்த மண்டபம், தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மண்டபத்தை குத்தகைக்கு எடுத்தவர் மண்டபத்தின் உட்புறத்தில் தென்னங்கீற்றுகளை அடுக்கி வைத்துள்ளார். இதனால், விநாயகரை வழிபட
சென்று வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், கற்பூரம், தீபம் ஏற்றி வழிபடக்கூடாது என, பக்தர்களை மிரட்டுகிறார். எனவே , விநாயகர் முன் கற்பூரம், தீபம் ஏற்றி வழிபடும் வகையில், மண்டபத்தின் உட்புறத்தில் வைக்கப்பட்டுள்ள தெ ன்னங்கீற்றுகளை இடையூறு இல்லாமல் ஓரமாக வைக்க ஹிந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.