உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சீரமைப்பு பணி

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சீரமைப்பு பணி

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில்  ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் சிறப்பும் வாய்ந்தது.மேலும் சத்திய பிரமாணங்களுக்கு நிலையமாக உள்ள  காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று மாநில அறநிலைத்துறை ஸ்தபதி பரமேஸ்வரப்பா கோயிலில் நடக்கும் சீரமைப்பு பணிகளை பரிசீலித்தார்.

 கடந்த சில நாட்களாக காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு சுமார் 10 கோடி ரூபாய் செலவில் விஜயவாடாவை சேர்ந்த ரவி என்ற பக்தர் உதவியோடு தமிழகத்தில் (புராதன) பழமை வாய்ந்த கோயில்களில் உள்ள சிற்பங்களைப் போல் காணிப்பாக்கம் கோயிலிலும் சிற்பங்கள்செதுக்கப்பட்டு கோயில் சீரமைப்பு  பணிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த கோயில் சீரமைப்பு பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்த பின்னர்  ஆகஸ்ட் 21ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர் .இந்நிலையில் மாநில ஸ்தபதி சீரமைப்பு பணிகளை பரிசீலித்தார். கோயில் சீரமைப்பு பணிகள் பழமை வாய்ந்த சிற்ப கலைகள் இருக்கும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை கண்டு பரமேஸ்வரப்பா (சந்துருப்தி) சந்தோஷம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !