உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உழவாரம்

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உழவாரம்

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சன்னதிகளில் உழவாரம் நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், திருமுதுகுன்றம் விருத்தகிரீஸ்வரர் அர்த்தஜாம அடியார் வளர்ச்சிக்குழு சார்பில், நேற்று காலை 7:00 மணி முதல், பகல் 12:00 மணி வரை உழவாரம் நடந்தது. அதில், ஆழத்து விநாயகர், விருத்தாம்பிகை அம்மன் சன்னதிகளில் தண்ணீர் ஊற்றி, முழுமையாக துாய்மைப் படுத்தப்பட்டது. பின்னர், கொடிமரங்கள், பலிபீடங்கள், தரைத்தளம், பிரகாரம் மற்றும் விளக்குகள், வஸ்திரங்கள் சுத்தம் செய்யும் பணியில் ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !