உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோவிலில் சஷ்டி பூஜை : மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவிலில் சஷ்டி பூஜை : மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆத்துார்: சஷ்டியையொட்டி, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில் நேற்று மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவர், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் ஏத்தாப்பூர், முத்துமலை முருகன் கோவிலில், 7 அடி உயர மூலவர் முத்துமலை முருகனுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் முருகன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆத்துார் வெள்ளை விநாயகர் கோவிலில் உள்ள பாலசுப்ரமணியர், வீரகனுார், தம்மம்பட்டி, தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் முருகன் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !