உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அப்புவிளை சுடலை கோயில் கொடைவிழா

அப்புவிளை சுடலை கோயில் கொடைவிழா

திசையன்விளை: அப்புவிளை சுடலை ஈஸ்வரர் கோயிலில் கொடைவிழா நடந்தது. திசையன்விளை, அப்புவிளை, ஓடக்கரை, சுடலை ஈஸ்வரர் கோயிலில் ஆனிக்கொடைவிழா இரு நாட்கள் நடந்தது. விழாவில் சந்திரசேகர் ஆசிரியர் சமயசொற்பொழிவு, சுவாமிக்கு மாக்காப்பு, சிறப்பு புஸ்ப அலங்கார தீபாராதனை, கணபதி ஹோமம், செல்வ விநாயகர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம், கும்பாபிஷேகம், 21 வகை சிறப்பு அபிஷேகம், மதிய கொடை சிறப்பு தீபாராதனை, அன்னதானம், மேளம், வில்லிசை, சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை எம். வி.ரமேஷ் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !