உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலின் கதவை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு

கோயிலின் கதவை உடைத்து பூஜை பொருட்கள் திருட்டு

பெருநாழி: பெருநாழி அருகே டி. குமாரபுரம் கிராமத்தில் உள்ள ஜெய வைரவசாமி கோயிலில் நேற்று காலை 10 மணி அளவில் கோயிலில் பூஜை செய்துவிட்டு பூட்டிவிட்டு திரும்ப மாலை 4:00 மணிக்கு கோயிலை திறக்க வந்த போது கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பித்தளை குத்துவிளக்கு, கொங்கு விளக்கு, உண்டியல், தீபாதாரணை தட்டு, பூஜை மணி உள்ளிட்ட பூஜை பொருட்களை மர்ம நபர் திருடியுள்ளார். இது குறித்து கோயில் அர்ச்சகர் பச்சம்மாள் 70 அளித்த புகாரின் பேரில் பெருநாழி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !