உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் செவ்வாய்‛வேப்பிலை திருவிழா

ஆடி முதல் செவ்வாய்‛வேப்பிலை திருவிழா

ஆர்.கே.பேட்டை:ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வீடுகளில் அம்மனுக்கு கூழ் வார்க்கப்பட்டது. ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையான நேற்று, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள், அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டனர்.வேப்பிலை தோரணங்களால் வீட்டு வாயிலை அலங்கரித்தனர். நாளை மறுதினம், ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று, அம்மனுக்கு சேலை படைத்து, வஸ்திர பூஜை நடத்த உள்ளனர். முதல் செவ்வாய்க்கிழமையை ஒட்டி, வெள்ளாத்துாரம்மன், பெருமாநல்லுார் ஓசூரம்மன், சொரக்காய்பேட்டை நலம்புரியம்மன், பாண்டரவேடு தொப்பையம்மன், வங்கனுார் அன்னியம்மன், பச்சையம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !