பழநி மலைக்கோயிலில் வின்ச் டிக்கெட் சர்வர் பழுது
ADDED :1256 days ago
பழநி : பழநி மலைக்கோயில் செல்ல பயன்படும் வின்ச் சேவைக்கான டிக்கெட் வழங்கும் இணையதள சர்வரில் பாதிப்பு ஏற்பட்டதால் பக்தர்கள் அவதியுற்றனர்.
பழநி மலை கோயில் சென்று வர படிப்பாதை, வின்ச், ரோப் கார் சேவைகள் உள்ளன. அவற்றில் பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பக்தர்கள் தற்போது வின்ச் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்றுகாலையில் வின்ச், பிரசாத, தரிசன டிக்கெட் உட்பட அனைத்து டிக்கெட் வழங்கும் சேவைகளுக்கான சர்வர் பழுதடைந்தது. கோயில் நிர்வாகிகள் அதனை உடனடியாக சரி செய்து பக்தர்கள் டிக்கெட் பெற வசதி செய்தனர்.