சாமிபடத்திற்கு இட்ட பூமாலைகளை ஓடும் நதியில் விடுவது ஏன்?
ADDED :4847 days ago
கடவுளுக்கு சாத்திய மாலைக்கு நிர்மால்யம் என்று பெயர். இதனை கால்மிதிபடும் அசுத்தமான இடத்தில் போடுவது கூடாது. அதனால், ஓடும் நீரில் சேர்த்துவிட்டால் கடலுக்குச் சென்று சேர்ந்து விடும் என்ற அடிப்படையில் ஆற்றில் போட்டனர். ஆனால், இப்போது இதற்கான வாய்ப்பு இல்லை. தண்ணீர் ஓடும் ஆற்றை தேட வேண்டியிருக்கிறதே!