காஞ்சி முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா
ADDED :1246 days ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் குமரகோட்டம், வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட மாவட்டம் முழுதும் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் இன்று ஆடிகிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற ஏகாம்பரநாதர் கோவிலின் பிரதான ராஜகோபுரம் அருகே உள்ள, 12 அடி உயரமுள்ள ராஜகோபுர ஆறுமுகப்பெருமானுக்கு இன்று காலை 7:00 மணிக்கு ஆடிகிருத்திகை சந்தனகாப்பு அலங்கார தரிசனம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.