உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி கிருத்திகை திண்டிவனத்தில் பக்தர்களுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம்

ஆடி கிருத்திகை திண்டிவனத்தில் பக்தர்களுக்கு மிளகாய் சாந்து அபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கலில் உள்ள, அன்புநாயக ஈஸ்வரர் கோவில் ஆறுமுகப் பெருமானுக்கு நடந்த, ஆடி கிருத்திகை 56 ஆம் ஆண்டு விழாவில், நேற்று காலை சுவாமி முருகருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனை தொடர்ந்து கோவில் எதிரில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மிளகாய்சாந்து அபிஷேகமும் நடந்தது. அதன் பின்னர் ஏராளமான பெண்கள் அலகு குத்தி பால்குடம் ஏந்தியும், ஆண்கள் காவடி சுமந்து ஆடிசென்றனர்.அதை தொடர்ந்து, பத்துக்கு மேற்பட்ட ஆண் பக்தர்கள் அலகு குத்தி உரல் இழுத்து சென்றனர். தொடர்ந்து கார், ஜீப், மற்றும் சுவாமி தேர்களை அலகு குத்தி ஆண் பக்தர்கள் இழுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !