மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1140 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1140 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1140 days ago
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் வந்து முருகப் பெருமானை தரிசித்தனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பக்தர்கள் பால், பன்னீர், புஷ்ப, மயில் மற்றும் அன்னக்காவடிகளை தோளில் சுமந்து, மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிபட்டனர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆடி மாதம் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தாலும், இந்த மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை அன்று, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். அந்த வகையில், வடபழனி முருகன், கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீசுவரர், பாடி திருவலிதாய நாதர், அண்ணாநகர் மேற்கு தென்றல் காலனி பாலசுப்பிரமணிய சுவாமி, அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர், குரோம்பேட்டை குமரன் குன்றம், குன்றத்துார் முருகன், பிராட்வே காளிகாம்பாள் கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று முருக பெருமானுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலை, மயில் வாகனத்தில், முருகப் பெருமான் வீதியுலா நடந்தது. இந்த கோவில்களில், பக்தர்கள் காவடி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். வடபழனி, கந்தகோட்டம் கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வரிசைகளில் நின்று மூலவரை தரிசித்தனர்.
1140 days ago
1140 days ago
1140 days ago