சிவனை மாணிக்கவாசகர் ஏகன் அநேகன் என்று குறிப்பிடுவதன் தாத்பர்யம் என்ன?
ADDED :4846 days ago
ஏகன் என்றால் ஒருவன். அனேகன் என்றால் ஒன்றுக்கு மேற்பட்டவன். அதாவது இறைவன் ஒருவனே. அவனே பிற தெய்வங்களாகவும், பிற உயிர் களாகவும் இருக்கிறான். எந்த தெய்வத்தை வழிபட்டாலும் ஒருவன் என்ற நிலையில் இருக்கும் பரம்பொருளையே சென்று சாரும். சைவ சித்தார்ந்த சாஸ்திர நூலாகிய சிவஞான சித்தியாரில், இச்செய்தி உறுதிபடச் சொல்லப்படுகிறது. இதனை உணர்த்தும் வகையில் தான் மணிவாசகர் ஏகன் அநேகன் என்று சிவனைப் போற்றுகிறார்.