உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருநகர் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா

பெருநகர் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம்-ஆடிகிருத்திகை விழாவையொட்டி, பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார்.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை  பெருநகரில், பழமையான பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிகிருத்திகையொட்டி இக்கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு, நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும்  சிறப்பு அலங்காரம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு மலர் அங்காரத்தில், வள்ளி, தெய்வானையருடன் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !