உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் தேர் பவனி

சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் தேர் பவனி

புதுச்சேரி: உருளையன்பேட்டை, சுப்பையா நகர் சொர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் தேர்பவனி நடைபெற்றது.உருளையன்பேட்டை, சுப்பையா நகரில் உள்ள வேதவிநாயக முக்கூடல் ஸ்ரீ சொர்ணமுத்து  மாரியம்மன் கோவிலில் ஆடிமாத திருவிழா நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு மேல் அம்மன் தேர்பவனி நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா, தேர்பவனியை தொடங்கி  வைத்தார். தி.மு.க., உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், செயலாளர் சக்திவேல் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !