உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயர்ந்த நிலையை அடைய...

உயர்ந்த நிலையை அடைய...

வழிகாட்டுகிறார் புத்தர்

* உண்மையை பேசு. உதவி கேட்பவருக்கு செய். உயர்ந்த நிலையை அடைவாய்.  
* உனது நல்ல மனம்தான் உனக்கு உதவி செய்யும். பெற்றோர், உறவினர்கூட அந்த அளவுக்கு செய்ய முடியாது.
* மாட்டு வண்டியின் சக்கரம் மாட்டின் காலை பின்தொடரும். அதுபோல நீ செய்யும் பாவம் உன்னைத் தொடரும்.
* உன்னுடைய நிழல் போல, நீ செய்த புண்ணியமும் உன்னைத் தொடரும்.
* புதிதாய்க் கறந்த பசும்பாலைப் போல, பாவச் செயல்கள் உடனேயே புளிப்பாக மாறுவதில்லை.
* பாவத்தை செய்வது எளிது. ஆனால் புண்ணியத்தை செய்வது கடினம்.
* பெற்றோரை ஆதரித்தல், மனைவி, குழந்தைகளை போற்றுதல் இதுதான் வாழ்வின் பெரும் பாக்கியம்.
* நங்கூரம் பாய்ச்சிய கப்பல்போல உனது மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
* பிறப்புக்குக் காரணம் எதுவோ, அதுவே இறப்புக்கும் காரணம்.  
* அறிவு, ஒழுக்கமே ஒருவரை மதிப்பிடும் அளவுகோல். பிறப்பு அல்ல.
* ஆசையை வென்ற மனிதனை எவராலும் வெல்ல முடியாது.
* நீ உன்னை புரிந்து கொண்டால், பிறரை புரிந்து கொண்டதற்கு சமமாகும்.
* நல்லதை செய்வதற்கு சிறிது தாமதித்தாலும் மனம் மாறிவிடும். உடனே செய்துவிடு.
* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !