காரைக்குடி பகுதியில் ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழிபாடு
ADDED :1200 days ago
காரைக்குடி: காரைக்குடி பகுதியில், ஆடி அமாவாசை முன்னிட்டு, ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆண்டுதோறும் வரக்கூடிய 3 அமாவாசைகளில் முக்கியமான அமாவாசையாக ஆடி அமாவாசை கருதப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மக்கள் கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இவ்வாண்டு, இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். கோவிலூரில் உள்ள கொற்றவாளீஸ்வரர் கோயில் தெப்பத்தில் ஆயிரக்கணக்கான பல மணி நேரம் காத்திருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மேலும், காரைக்குடி நகரச் சிவன் கோயில் செக்காலை சிவன் கோயில் பகுதியில் உள்ள குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.