பிருத்தியங்கிரா தேவி கோவில் ஆடி அமாவாசை பூஜை
ADDED :1178 days ago
தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கில் உள்ள பட்டு குருக்கள் நகரில் பிருத்தியங்கிராதேவி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக சேதுக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நிகும்பலயாகும் உட்பட சிறப்பு யாகங்கள் நடந்தன. பக்தர்கள் ஏராளமானோர் மிளகாயை ஹோமத்தில் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து அட்சயமகா கணபதிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்விக்கும் பெற்று விசேஷ பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.