உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை

எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே, சென்னம்பாளையத்தில் உள்ள எமதர்மர் கோவிலில், ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 8 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு எமதர்மருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை செய்யப்பட்டது. கோவில் பூசாரி கந்தசாமி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.
* ஆடி அமாவாசை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள், பவானி ஆற்றின் கரையோரம் நடந்தன. அதேபோன்று மேட்டுப்பாளையம் நகராட்சி நந்தவனத்தில், தர்ப்பணம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணமும், திதியும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !