ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED :1172 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் 5ம் ஆண்டு தேர் திருவிழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தேர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவில், திண்டிவனம் ராம்டெக்ஸ் வெங்கடேசன், புதுச்சேரி ராம் சில்க்ஸ் நடராஜன், ராம் தங்கமாளிகை ரமணிகாந்த், ஒலக்கூர் ஊராட்சி தலைவர் ராமு (எ) ராமகிருஷ்ணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.