நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் புஷ்பாங்கி சேவை
ADDED :1172 days ago
நெட்டப்பாக்கம்: நல்லாத்துார் வரதராஜப் பெருமாள் கோவிலில் புஷ்பாங்கி சேவை நடந்தது. ஏம்பலம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற, வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, புஷ்பாங்கி சேவை யும், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சன்னதி புறப்பாடும் நடந்தது.முன்னதாக, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.வரும் 1ம் தேதி ஆடிப்பூர உற்சவமும், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு பெருந்தேவி தாயாருக்கு பூவங்கி சேவையும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.