மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி சிறப்பு பூஜை
ADDED :1171 days ago
திருப்புவனம்: ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஆடி இரண்டாவது வெள்ளி என்பதால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் உச்சி கால பூஜை நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.