உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் ஆடி சிறப்பு பூஜை

சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் ஆடி சிறப்பு பூஜை

சூலூர்: சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் பல்வேறு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை ஒட்டி, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. முத்துக்கவுண்டன் புதூர், செங்கத்துறை மாகாளியம்மன் கோவில்கள், அரசூர் மாரியம்மன் கோவில்களில் நடந்த அபிஷேக, அலங்கார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பள்ளபாளையம் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ள புடவைக்காரி மகாலட்சுமி கோவிலில் நேற்று முன்தினம் மண்டல பூஜை விழா நடந்தது. பன்னாடி வெள்ளலூரான் வமசத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !