காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1127 days ago
ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கும் கோயிலில் நடக்க இருக்கும் மகா கும்பாபிஷேகம் மற்றும் 2022 ஆம் ஆண்டு கோயிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தையொட்டி மாநில அமைச்சர் பெத்தி. ரெட்டி ராமச்சந்திரா ரெட்டியை சித்தூர் எம்.எல்.ஏ எம்.எஸ்.பாபு மற்றும் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு ஆகியோர் திருப்பதியில் அமைச்சரின் வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இவர்களுடன் கோயில் துணை பொறியாளர் வித்தியாசகர் ரெட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் கலந்து கொண்டனர்.