உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று 04.08.2022 வியாழக்கிழமை அன்று கோயில் வளாகத்தில் புதிய கொடிமரத்தை பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்ததோடு சிறப்பு பூஜைகள் செய்து மகா ஆரத்தியை சமர்ப்பித்தனர் .இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக எம்.எல்.ஏ. எம்எஸ் பாபு மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் பாபு மற்றும் மாநில அறநிலைத்துறை ஸ்தபதி பரமேஷ்வரப்பா மற்றும் கோயில் செயற்பொறியாளர் வெங்கட்நாராயணா , கோயில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதான திட்டத்திற்கு நன்கொடை: காணிப்பாக்கம் ஸ்ரீ விநாயகர் கோயிலில் நடக்கும் அன்னதான திட்டத்திற்கு சித்தூரைச் சேர்ந்த வெங்கடபதி நாயுடு என்ற பக்தர் நன்கொடையாக 1 லட்சத்திற்கான காசோலையை கோயில் அதிகாரி சீனிவாசுலு யிடம் வழங்கினார் இவர்களுக்கு முன்னதாக சிறப்பு தரிசன ஏற்பாடுகளை  செய்ததோடு கோயில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !