விவசாயிகள் நலனுக்காக ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம்
ADDED :1528 days ago
போடி: விவசாயிகளின் நலனுக்காகவும், மழை வேண்டியும் போடி ஐயப்பன் கோயிலில நெற்கதிர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
மழை பெய்யவும், விவசாயிகள் பணிகள் மேற்கொள்வதோடு விவசாயிகள் நலன் காக்கும் வகையில் போடி ஐயப்ப பக்த சபை சார்பில் ஐயப்பனுக்கு நெற்கதிர் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பாயாசத்துடன் கூழ் காய்ட்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த சபை குருநாதர் மகாலிங்கம் தலைமையில், தலைவர் மணிகண்டன், செயலாளர் சங்கிலிக்காளை, துணை செயலாளர் விவேகானந்தன் உட்பட நிர்வாகத்தவர்கள் செய்திருந்தனர் சிறப்பு அலங்காரத்தினை அர்ச்சகர் கமலக்கண்ணன் செய்திருந்தார்.