திருப்புவனம் திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1257 days ago
திருப்புவனம்: திருப்புவனம் திரெளபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. திருப்புவனம் திரெளபதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்தாண்டு கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது இன்று திரெளபதி அம்மனுக்கும் அர்ஜுனருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அம்மனும் சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டது. செந்தில் பட்டர், அசோக் பட்டர் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தனர். வரும் 11ம் தேதி காலையில் பால்குடம் ஊர்வலமும் மாலை 6 மணிக்கு பூக்குழி இறங்குதலும் 12ம் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.