ஆடி வெள்ளி கூழ் வழங்கல்
ADDED :1157 days ago
சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி கரியன் குளக்கரை குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது. கம்பு, கேழ்வரகு, அரிசி கலந்து கூழ் தயாரிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன், அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விசேஷ பூஜைகளுக்கு பின், பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கல் நடந்தது. மேட்டுப்பட்டி, நடூர், தென்புதூர், கீழக்கோட்டை, ஜனதா காலனி, செக்கடி தெரு, சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயில், வனபத்திர காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.