மேப்புலியூர் வீரனார் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு
ADDED :1169 days ago
உளுந்தூர்பேட்டை: மேப்புலியூர் ஸ்ரீ வீரனார் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா மேப்புலியூர் ஸ்ரீ வீரனார் சுவாமி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், தீபாரதனைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தில்லன், ஊர் முக்கியஸ்தர்கள் சக்திவேல், நேரு, தனசேகர், மணிகண்டன், அரசன் உள்ளிட்ட பலர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.