முனீஸ்வரர் கோவில் கிடாய் வெட்டு விழா
ADDED :1478 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் கோட்டை தர்ம முனிஸ்வரர் கோவில், ஆடி பூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவருக்கு, சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சாத்தமங்கலம், கொட்டுப்புளி, வரவணி, வ.பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த, பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை டிரஸ்டி சக்தி குமார் செய்திருந்தார்.