பீமன் வேட நிகழ்வு ஊர்வலம்
ADDED :1169 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, மண்டகப்படி காரர்களின் பீமன் வேட ஊர்வலம் நடைபெற்றது. பெத்தார்தேவன் கோட்டை, கீழக்கோட்டை, ஆவரேந்தல் கிராம மண்டகப்படிக்காரர்களின், பீமன் வேட ஊர்வலத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, உடலில் வர்ணங்கள் பூசி ஆட்டம், பாட்டத்துடன் பஞ்சபாண்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக, நடனமாடியபடி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபாடு செய்தனர்.