உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தேசியக்கொடி வழங்கிய அர்ஜூன் சம்பத்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பொது தீட்சை அவர்களிடம் தேசியக் கொடி வழங்கினார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளின் படி கோயில் தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் ஹேமசபேச தீட்சிதரிடம், 75 வது ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு கோயிலில் ஏற்றுவதற்காக தேசியக்கொடியை வழங்கினார். நிகழ்ச்சியில் பாஜக பிரமுகர் உ.வெங்கடேச தீட்சிதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடராஜர் கோயிலில் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாவின் போது கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை தொன்று தொட்டு வழக்கமாக கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !