அவன்தான் மனிதன்
ADDED :1234 days ago
அது ஒரு காலை நேரம். மன்னர் ஒருவர் எளிமையான உடையை அணிந்து மாறுவேடத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது பார்த்து மழை கொட்ட ஆரம்பித்தது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, மக்களின் மனநிலையை அறிய விரும்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு உதவி கிடைக்கவில்லை. அந்நிலையில் ஒருவர் மட்டும் அவருக்கு ஒதுங்க இடம் கொடுத்தார். பிறகு மாலையிலேயே அவருக்கு பரிசுடன், தான் யார் என்பதை ஓலையாக எழுதி அனுப்பினார் மன்னர். இதைப் பார்த்தவர்கள் ‘ஐயோ. தவறு செய்து விட்டோமே. அவரை நன்றாக கவனித்திருப்போமே’ என வருந்தினர். இப்படி பிறர்படும் கஷ்டத்தை உணரும்போதுதான் மனிதநேயம் பிறக்கிறது. இதை உணர்ந்து கொள்பவன்தான் உண்மையான மனிதன்.