வெற்றிலை அலங்காரத்தில் ராமலிங்க செளடேஸ்வரியம்மன்
ADDED :1153 days ago
திருப்பூர்: திருப்பூர், வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரியம்மன் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெற்றிலை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூனூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. பழைய பூணூலை அகற்றிவிட்டு வேதியர்கள் வழிகாட்டுதல்படி மந்திரங்கள் ஓதி புது பூணூல் அணிந்து கொண்டனர். உபாகர்மா எனப்படும் பூணூல் அணிவது, வேத கல்வி ஆரம்பிப்பது இந்த நாளில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.