சந்தன காப்பு அலங்காரத்தில் தேவதானம்பேட்டை வனதுர்கை அருள்பாலிப்பு
ADDED :1511 days ago
செஞ்சி: தேவதானம்பேட்டை வனதுர்கை கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டை மலை மீதுள்ள காட்டில் சித்தர்கள் வழிபட்ட பல நுாற்றாண்டு பழமையான வனதுர்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சத்ரா பவுர்ணமி, ஆடி பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் செய்தனர். மகா தீபாரதனை நடத்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.